முனீஸ்வரருக்கு உரிய விசேஷமான, காயத்ரீ மந்திரம்


குலதெய்வ பூஜைகளைப் பங்கமின்றி, மறக்காது நிறைவேற்ற உதவும் வழித்துணை மூர்த்தியே ஸ்ரீ முனீஸ்வரர். பல்வேறான தோஷங்கள், துர்சக்திகளில் இருந்து நம்மைக் காக்கும் வழித்துணை மூர்த்தியே ஸ்ரீ முனீஸ்வரர். முனீஸ்வரன், வாத முனீஸ்வரர், பாத முனீஸ்வரர் போன்ற பல்வகை முனீஸ்வர மூர்த்திகளும் உண்டு. இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக அருள்பவரே *மூனீஸ்வர மூர்த்தியாவார்.

முனீஸ்வரர் வழிபாடு யாவர்க்கும், யாவைக்குமே.  முனீஸ்வரருக்கு உரிய விசேஷமான சக்கரங்கள், காயத்ரீ மந்திர வகைகளும் உண்டு,

ஓஃம் ஐம் க்லீம் ஹ்றீம் ஸ்ரீ முனீஸ்வராய நம: 

என்பது ஜாதி, மத பேதமின்றி யாவருமே ஓதிப் பயன் பெற வல்லதாகிய ஸ்ரீ முனீஸ்வரருக்கு உரித்தான எளிமையான மூல மந்திரம். உடல், உள்ள சுத்தியுடன் ஓத வேண்டிய அரும்பெரும் மந்திரம். தவமுனி, லலாடமுனி, பச்சைமுனி, லாடமுனி, அரசமுனி, சந்நாசிமுனி, ஆலமுனி என்று பல்வேறு முனீஸ்வர தேவதா மூர்த்திகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் எண்ணற்றத் தாத்பரியங்கள் உள்ளன.

தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப் போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து
வாடிய பயிரையும் வளரச் செய்யும் முனீஸ்வரனே போற்றி



Leave a Comment