வேதங்களின் தாய் காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த மந்திரம் மற்றும்  பெரியது ஆகும்.  இது அனைத்து வேத மந்திரங்களின் சக்தி மற்றும் ஆற்றலைத் தன்னுள்  கொண்டுள்ளது. இது மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியை அளிக்கிறது.

அன்னை காயத்ரி

காயத்ரியை வேதங்களின் தாய் என்றும் அனைத்து பாவங்களையும் அழிப்பவர் என்றும் வேதங்கள் அறிவிக்கின்றன. அவள் அன்னபூரணியாக விளங்குபவள். தெய்வீகத் தாயாகப் போற்றப்படுபவள். அனைத்து உயிர்களுக்கும் உயிரூட்டும் தாயாக அன்னை காயத்ரி விளங்குகிறாள். பூமியை தூய்மை படுத்துவதில் காயத்ரி மந்திரத்தைப் போல சுத்திகரிப்பு எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. ஒரு மனிதன் தான் விரும்பியதை அடைய காயத்ரி மந்திரம் பெரிதும் உதவுகின்றது.

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த தலையாய மந்த்ரம். காயத்ரி மந்திரம் என்பது 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பிரபஞ்ச  தாளமாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு எழுத்துக்களின் மும்மடங்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்ம வடிவான காயத்ரி மந்திரம்  அனைத்து மந்திரங்களிலும்  மிகப்பெரியது.

இது அனைத்து தீமைகளிலிருந்தும் ஜீவன்களை  பாதுகாக்கும் ஆன்மீக கவசமாக செயல்படுகிறது. இது மிக உயர்ந்த ஆன்மீக வெளிச்சத்தின் பிரகாசமான ஒளியாக இருந்து மனிதர்களுக்கு ஆசிகளை வழங்குகின்றது.

உடலுக்கு தூய்மை எப்படி தேவையோ அது போல உள்ளத்துக்கு தூய்மை தேவை. அந்த உள்ளத் தூய்மையை  வழங்குவதி இந்த காயத்ரி மந்திரம் ஆகும்.

காயத்ரி ஜெபம்:

காயத்ரி ஜெபம் என்பது அனைத்து மாயைகளையும் அழிக்கும், பிராணனை உற்சாகப்படுத்தும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்தை அளிக்கும் தியானத்தின் மிக உயர்ந்த வடிவமாகும்.

இது ஞானம், செழிப்பு, தூய்மை மற்றும் வீடுபேற்றை  வழங்கும்  ஒளியைப் பற்றிய ஒரு தியானமாகும்.காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பவர்கள் மந்திரத்தின் மாய சக்தி மூலம் வாழ்வில் பிரகாசத்தை அடைவார்கள். இது எல்லா அச்சங்களையும் நீக்குகிறது மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகின்றது.

காயத்ரி மந்திர ஜெபத்தின் பலன்:
காயத்ரி மந்திரம் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்க வலிமையை அளிக்கின்றது. வாழ்வில் வளமை மற்றும் செழுமை அளிக்கின்றது. இந்த மந்திரம் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது மற்றும் எட்டு வகையான செல்வங்களை அல்லது அஷ்ட ஐஸ்வர்யத்தை வழங்குகிறது.
காயத்ரி மந்திரம்

"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.காயத்ரி மந்திரம் பற்றி மேலும் அறிய .



Leave a Comment