சிவன் கோயிலில் தரிசிக்கும் முறை


சிவன் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பாக ராஜகோபுரத்தை, சிவசொரூபமாக எண்ணி இரு கை கூப்பித் தொழுது பணிய வேண்டும். பின்னர் கோயிலுக்குள் செல்ல வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”.

உள்ளே சென்றவுடன் முதலில் காணப்படும் கொடி மரம், பலிபீடத்திற்கு முன்பாக நமஸ்கரிக்க வேண்டும். நந்திகேசுவரரை வணங்கி, சிவன் சந்நிதிக்கு சென்று, சிவலிங்க மூர்த்தியை வழிபட வேண்டும்.

சுற்றுப் பிராகாரத்திலுள்ள விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், பைரவர், சனீஸ்வரர், நவகிரஹ தேவர்கள் போன்ற மூர்த்தங்களை தரிசித்த வண்ணம் சந்நிதிக்கு வெளிப்பிராகாரம் வந்து, கொடி மரத்தின் முன்னால் அமர்ந்து கண்ணை மூடி தியானிக்க வேண்டும். அவ்வாறு தியானித்தால் சிவனருள் கிட்டும்.
 



Leave a Comment