மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்....


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம் இன்று காலை வெளி வீதிகளில் சுற்றி வந்தது. சிவபெருமான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வளிக்கும்  நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் வண்ணம் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி திதி அன்று மதுரையில் அஷ்டமி சப்பரம்(தேர்) நிகழ்ச்சி நடைபெறும் ஆகும் .

 அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளிவீதிகளில் உலாவந்தார். இன்று காலை மேளதாளங்கள் முழங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் தேர்முட்டி பகுதியில் 2 சப்பரங்களில் தனித்தனியாக ஏற்றப்பட்டு  வெளிவீதிகளில் உலா வர துவங்கியுள்ளனர். 

அப்போது தேரில் இருந்து அரிசி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.சாலைகளில் சிந்தி கிடக்கும் அரிசியை  பொது மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். 

இதேபோல சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று அஷ்டமி சப்பர ஊர்வலம் நடந்தது. படியளக்கும் உற்சவம் என்பது சிவபெருமான் கைலாயத்தில் இருந்தபடியே சகல ஜீவராசிகளுக்கும் உணவு வழங்குவார். 

அதன்படி மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் இன்று உற்சவம் நடந்தது. அம்மனுக்கும் சோமநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமநாதர் பிரியாவிடை தாயாருடனும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி தேரில் வீதியில் வலம் வந்தனர். பக்தர்கள் ஆனந்தவல்லி&சோமநாதர் வரும் வீதியெங்கும் அரிசியை தூவியபடியே வந்தனர். 
 



Leave a Comment