திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி.... 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ஏற்கனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் தேதி நள்ளிரவு முதல் சொர்க்கவாசல் ஆகம முறைப்படி மூடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

இந்நிலையில் 4ஆம் தேதி முதல் வழக்கம்போல் நடைபெறக்கூடிய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள்  31-ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள  பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலவச  தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்பட உள்ளது. 

எனவே இந்த கவுண்டர்களில் டிக்கெட்டுகளை பெரும் பக்தர்கள் 4-ஆம் தேதி காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி ஒருநாள் முன்னதாக தரிசனத்திற்கான இலவச டிக்கெட்களை ஆதார் அடையாள அட்டை வைத்து வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment