வீட்டில் துளசி மாடம் எங்கு அமைத்தால் நலம்?


வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும் மரங்களை வைத்தால் வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை நடாமல் இருப்பதே மேலான பலனைத் தரும்.

 கூர்மையான முட்கள் கொண்ட காட்டு மரங்களை வளர்க்கக்கூடாது. வட்ட வடிவ இலை கொண்ட மரங்கள் சிறப்பானவை. செயற்கை முறையில் வளர்ச்சி குன்றிய குற்று மரங்கள் அதாவது, போன்சாய் போன்ற அலங்கார மரம் வளர்ப்பது நல்லதல்ல. இதை தவிர்க்க வேண்டும். புளிய மரம், வில்வம், எலுமிச்சை, இலந்தை மரங்கள் புகழைக் குறைப்பதுடன் மாளாத கஷ்டத்தை வரவழைக்கும். கழுகு எனப்படும் பாக்கு மரமும் வீட்டுள் நல்லதல்ல.

துளசி மாடத்தை வீட்டின் வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து அங்கே  வைத்தாலும் நற்பலனே. ஆனால், துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது.

 நறுமணம் கொண்ட செடி, மரங்கள் பவளமல்லி, மந்தாரை போன்றவற்றை பராமரிப்பது விருட்ச வேதை எனப்படும் நற்பலன்களை அளிக்க வல்லவை.

வாசற்படிக்கு நேர் முன்னால் உள்ள மரத்தால் நம் சந்ததியினர் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அந்த இடத்தில் மரக் கன்று நடுவதோ, ஏற்கெனவே இருக்கும் மரத்தை வளர்ப்பதோ கூடாது; அதனை அப்புறப்படுத்துவது நல்லது. முள் உள்ள செடி, மரங்களை வளர்த்தால் எதிரிகளால் தொல்லையும் அதனால் நஷ்டமும் ஏற்படும், மனதில் பயம் உருவாகும், தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக அயலார் பார்வையில் படும்படி இவை வீட்டின் முன்பகுதியில் இருக்கலாகாது. 
 



Leave a Comment