திருவண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள அஷ்டலிங்கங்கள்..... 


முழு முதற்கடவுளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தை சுற்றி வலம்வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுவதோடு, மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகள் நம் வாழ்வைச் சிறப்பானதாக மாற்றும். மனதில் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் `அண்ணா மலையான்’ ஒருவனை மட்டுமே நினைத்துக்கொண்டு கிரிவலம் மேற்கொண்டால் இறைவனின் அருளை பரிபூரணமாகப் பெற முடியும். 

 

லிங்கத்தின் பெயர்: இந்திர லிங்கம்
திசை: கிழக்கு
பிரதிஷ்டை செய்தவர்:- இந்திரன் (தேவர்களின் அரசன்)
தொடர்புடைய கிரகங்கள்:- சூரியன், சுக்கிரன்
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- நீண்ட ஆயுள் மற்றும் புகழ்

 

லிங்கத்தின் பெயர்: அக்னி லிங்கம்
திசை:- தென்கிழக்கு
பிரதிஷ்டை செய்தவர்:- அக்னி
தொடர்புடைய கிரகங்கள்:- சந்திரன்
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- நோய்களிலிருந்தும், பயத்திலிருந்தும் நிவாரணம்

லிங்கத்தின் பெயர்: – எம லிங்கம்
திசை:- தெற்கு
பிரதிஷ்டை செய்தவர்:- எமன்
தொடர்புடைய கிரகங்கள்:- செவ்வாய்
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- நீண்ட ஆயுள்

 

லிங்கத்தின் பெயர்: – நிருதி லிங்கம்
திசை:- தென்மேற்கு
பிரதிஷ்டை செய்தவர்:- நிருதி(அசுரர்களின் அரசர்)
தொடர்புடைய கிரகங்கள்:- ராகு
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- உடல் நலம், செல்வம் மற்றும் புகழ், குழந்தை பாக்கியம்

 

லிங்கத்தின் பெயர்: – வருண லிங்கம்
திசை:- மேற்கு
பிரதிஷ்டை செய்தவர்:- வருணன்
தொடர்புடைய கிரகங்கள்:- சனி
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக நீர் சம்பந்தபட்ட வியாதிகள்)


லிங்கத்தின் பெயர்: – வாயு லிங்கம்
திசை:- வடமேற்கு
பிரதிஷ்டை செய்தவர்:- வாயு
தொடர்புடைய கிரகங்கள்:- கேது
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக இதயம், மூச்சுக்குழாய், வயிறு

 

லிங்கத்தின் பெயர்: – குபேர லிங்கம்
திசை:- வடக்கு
பிரதிஷ்டை செய்தவர்:- குபேரன்
தொடர்புடைய கிரகங்கள்:- குரு
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- செல்வம் மற்றும் உன்னதமான வாழ்க்கை

 

லிங்கத்தின் பெயர்: – ஈசான்ய லிங்கம்
திசை:- வடகிழக்கு
பிரதிஷ்டை செய்தவர்:- ஈசான்யன்
தொடர்புடைய கிரகங்கள்:- புதன்
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:- மனஅமைதி
 



Leave a Comment