ஐயப்ப சுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் பூஜை...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஐயப்பனின் ஜென்ம தின சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
உத்திர நட்சத்திர நாளான இன்று சபரிமலையில் ஐயப்ப சுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் இந்த நாளை சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஜென்ம தினமாக கொண்டாடி வருகிறார்கள் அன்றைய தினம் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்வார்கள்.
இந்த ஆண்டு 1-6-2020 புகழ்பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமியின் ஜென்ம தினம் கொரோனா நோய்த்தொற்று பரவல் இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சபரிமலையில் பக்தர்கள் இன்றி எளிமையாக பூஜைகள் நடைபெற்றது.
இதற்காக 31- 5 -2020 மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து 1-6- 2020 அன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி சங்கரி கண்டலேறு மகேஸ்வரர் தலைமையில் நடைபெற்றது பின்னர் இரவு 7 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை மூடப்பட்டது.
Leave a Comment