அமர்நாத் புனித யாத்திரை ரத்து....


கொரோனா எதிரொலி காரணமாக 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.   

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
 
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடையும் என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.



Leave a Comment