அய்யா வைகுண்ட தர்மபதி பிரம்மோற்சவ திருவிழா தொடக்கம்... அற்புதமான வீடியோ காட்சி


சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை அடுத்து மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு புரட்டாசி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் அதனையொட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

இன்று பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் விழா நடைபெற்றது முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பூ , பால் , பழம் , இளநீர் , ஜவ்வாது , சந்தனம் , துளசி உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் பத்தாவது நாளான வருகிற 13 ஆம் தேதி தேர்பவனி நடைபெற இருக்கிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வந்தனர் ஐயா உண்டு ஐயா நாமம் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பி கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
 



Leave a Comment