மகிழ்ச்சிக்கான வழிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் கற்றுக்கொள்ள வாருங்கள்....


ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் மகிழ்ச்சிக்கான வழிகளைக் கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்   - இந்தியா முழுவதும் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.


" நீங்கள் செய்ய வேண்டியது மிக அதிகம், அதைச் செய்வதற்கான  நேரம் மிகக் குறைவு;  மற்றும் பணியைச் செய்ய ஆற்றல் இல்லை. அதற்கு  நீங்கள் என்ன செய்ய முடியும் என்றால்  உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதாகும். பிராணயாமம்  (சுவாச பயிற்சிகள்), தியானம் மற்றும் சுதர்சனக்  கிரியா ஆகியவை உங்களுக்கு  அதிக ஆற்றலைத் தருகின்றன, மேலும் உங்களை அதிக உற்பத்தித் திறன் உள்ளவராக ஆக்குகின்றன" என்று குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார். 

குருதேவரால் கண்டறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள கதியுள்ள சுவாச நுட்பமான   சுதர்சனக் கிரியா ஆனந்தப்பயிற்சித்  திட்டத்தின் மூலக்கல் ஆகும்.இந்த தனித்துவம் நிறைந்த  சுவாச நுட்பம், மன அழுத்தம் மற்றும் கோபம், விரக்தி மற்றும் மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை நீக்கி, ஒருவரை ஆற்றலுடன் ஆனால் அமைதி நிறைந்தவராக, கவனக் கூர்மையுடன் ஆயின் இளைப்பாறிய நிலையில் உள்ளவராக வைக்கின்றது.  

தொழில்நுட்பப் பரிசைப் பயன்படுத்தி  ஷில்லாங் முதல் மும்பை வரை மற்றும் ஜம்மு முதல் சென்னை வரை அனைத்து  நகரங்களை இணைத்து  3000+ க்கும் மேற்பட்ட வலை இடங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியின்  ரகசியங்களை அறிந்து கொள்ள  ஒரு மெய்நிகர் கூட்டமாக இப்பயிற்சி அமைந்து இருக்கும். முழு நாடும் மகிழ்ச்சி அலைகளில் ஒன்று சேரும். கடந்த 36 ஆண்டுகளில், இந்த நுட்பம் பல்வேறு தரப்பு பின்னணி மற்றும் சமயம் -விவசாயிகள், மருத்துவர்கள், இல்லத்தரசிகள், போராளிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சமணர்கள் மற்றும் பலர், என மனிதகுலத்தை  சுவாச சக்தியின் மூலம் ஒன்றிணைத்துள்ளது.

"ஒரு தனித்  தொழில் புகைப்படக் கலைஞராக, ஆக்கப்பூர்வமாக இருப்பதால், எந்த வொரு தடையையும்  தெளிவாக எதிர் கொள்ள வேண்டும்," என்று மும்பையைச் சேர்ந்த கலைஞர் பங்கஜ் ஆனந்த் கூறுகிறார். மேலும் "ஒரு நிலையான மனநிலை மட்டுமே ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். சுவாசம், தியானம் மற்றும் ஆன்மீகத்தின் துணைப் பொருளாக  படைப்பு உணர்வு மலர்கின்றது" என்று கூறுகிறார்.

சக்திவாய்ந்த சுவாச நுட்பங்கள், யோகா, பிராணயாமம்  மற்றும் தியானம் தவிர, வாழ்க்கையில் எந்தவொரு கடினமான அல்லது மன அழுத்தமுள்ள  சூழ்நிலையையும் கையாள நடைமுறை வாழ்க்கை கருவிகளை வழங்கும் ஊடாடும் ஞான அமர்வுகளும் இந்தப் பயிற்சித்  திட்டத்தில் இருக்கும். இதன் விளைவாக, திட்டத்தின் முடிவில், மக்கள் அமைதியான, நிலையான, மகிழ்ச்சியான மனநிலையையும், சுற்றியுள்ள அனைவருடனும் தொடர்பு கொள்ளும் உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு அமைப்பு(AIIMS)  மற்றும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்(NIMHANS) போன்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் சுதர்சனக்  கிரியா விளைவுகள் குறித்த ஒரு பரந்த ஆய்வின் படி, மன மற்றும் உடல் நல வழக்கமான நடைமுறையில் பின்வரும் நன்மைகள் உள்ளன.

•    இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது 
•    மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள் தோல்வியுற்ற நபர்களில் 71% முதல் 73% விகிதம் பதட்டம் குறைவு, மற்றும் 41%  பதட்ட நீக்கம் 
•    சுதர்சனக் கிரியா  கற்ற மன அழுத்த நோயாளிகள் ஒரு மாதத்திற்குள் 68-73% நிவாரண விகிதத்தை அனுபவித்துள்ளனர்  
•    தூக்கத்தின் ஆழ்ந்த அமைதியான கட்டங்களில் மூன்று மடங்கு அதிக நேரம் 
•    12 வாரங்களில் மேம்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு உயிரணு எண்ணிக்கை 
•    மேம்பட்ட சுவாச செயல்பாடு: சுவாச விகிதம் 1 வாரத்தில் 5% மற்றும் 12 வாரங்களில் 15% குறைந்து நுரையீரல் (முக்கிய) திறன் அதிகரிக்கின்றது 

மகிழ்ச்சியான, ஆற்றல்மிக்க மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கைக்கான ரகசியங் களை இந்த ஆனந்த உத்சவத்தில் ஆனந்தப்பயிற்சித்   திட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் 18, 2019 வரை வெப்காஸ்ட் மூலம் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கற்பிப்பார் என்பதைப்  பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சென்னையில், 50 க்கும் மேற்பட்ட இடங்களிலுள்ளவர்கள்  இந்தப் பயிற்சித்  திட்டத் தில் பங்கேற்கின்றனர் , மேலும் விவரங்களுக்கு, 8144265265 என்னும் எண்ணை  அழைக்கவும்

பயிற்சி பற்றிய மேலும் தகவல்களை   https://bit.ly/auwithgurudev  இல் காணலாம்

ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு, ராஜலக்ஷ்மி என்பவரை  9884017767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.



Leave a Comment