மூன்று நிமிடத்தில் தியானம் செய்யலாம்


இதனைச் செய்ய ஒரு நாளோ நேரமோ அவசியமில்லை. ஆரம்பித்த பின் தேவைக்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். உடல் நேராக இருக்க வேண்டும் கையிலுள்ள பெருவிரலும் அதனை அடுத்த விரலும் இணைந்திருப்பது முக்கியமானதாகும். அதனை “சின்முத்திரா” என அழைப்பர். சின் முத்திரையில் மனதைச் செலுத்துவ.

நடக்கும் போதோ, இருக்கும் போதோ, உரையாடும் போதோ, குளிக்கும் போதோ அதனைப் பயன்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு பயிற்சி மனதை ஒருநிலைப்படுத்த உதவும். அது எதுவாகவும் இருக்கலாம். பழக்கத்தில் வந்துவிட்டால் எங்கும் எதிலும் நாம் பயன்படுத்திப்பழகி வெற்றி பெறலாம்.

மூக்கு நுனியில் தியானம் செய்தல்

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு மூக்கின் நுனியில் பார்வையை நிலை நிறுத்துக. மூக்கு நுனியினை உற்றுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூக்கின் நுனிபற்றிச் சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் அமைதியாக எதையும் நினையாமல் இருக்கலாம அல்லது ஏதாவது விருப்பத்திற்குரிய இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து இதனைச் செய்வதால் மனம் பழக்கப்பட்டு அமைதியடைந்து லயப்படும்.
 



Leave a Comment