அத்தி வரதரை தரிசிக்க குவியும் கூட்டம்....


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்தி வரதரை தரிசிக்க மூன்றாவது நாளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதர் ஜுலை 1 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள். அத்திவரதர் ஆனவர் 48 நாட்கள் மட்டுமே காட்சி தருவார். 

இன்று மூன்றாவது நாளாக அத்திவரதர் பச்சை நிற பட்டு உடுத்தி, மல்லிகை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 கடந்த 2 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து விட்டு சென்றுள்ளனர். இன்று மூன்றாவது நாளும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

குறிப்பாக வயதானவர்கள் தங்களின் முதுமையை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று தரிசித்து விட்டு செல்கின்றனர். மேலும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர்  மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2500 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு. 

அத்தி வரதரை பார்க்க வரிசையானது அதிகாலை முதலை  2 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்டு செல்கிறது .மூன்றாவது நாளான இன்று அத்திவரதரை தரிசிப்பதற்கு சராசரியாக இரண்டு மணி நேரம் ஆகிறது.
 



Leave a Comment