ஸ்ரீசுவாமி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்கும் முறை....


முதலில் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்ரீவினாயகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும், கடல் நுரை போன்ற வஸ்துவால் ஆன விசேஷமான வெள்ளை நிறப் பிள்ளையாரான இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. இரண்டாவதாகச் சுவாமி மலையில் ஸ்ரீசுப்ரமணியரைத் தரிசிக்க வேண்டும்.

மூன்றாவதாக ஆடுதுறையில் உள்ள ஸ்ரீசூரியனார் கோவிலைத் தரிசிக்க வேண்டும். இங்குள்ள குளம் அற்புத மூலிகைச் சக்தி வாய்ந்தது. பார்ப்பதற்குப் பாசி பிடித்தாற் போல் அழுக்காகத் தோன்றிடினும் பரிபூர்ண நம்பிக்கை உள்ளோர் இதனை ஔஷத (மருந்து) நீராகக் கருதிப் பருகுகின்றனர். தேவ ரகசியங்கள் நிறைந்த மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும் இது.

இம்முறையில் மூன்று கோயில்களிலும் தரிசனம் செய்து மூன்றிலும் அன்னதானம் செய்து வழிபடுதலே சுவாமிமலையில் குடிகொண்ட ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமியைத் தரிசிப்பதின் பரிபூர்ண பலனைத் தரும்.



Leave a Comment