அறந்தாங்கி சிவன் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்.... 


அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சியம்மன் கோவிலின் கொடிமரம் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடிமரம் நடும் நிகழ்ச்சியில் சிவனடியார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில் திருப்பணிகள் ஏதும் செய்யபடாமல் சிதிலமடைந்து சுமார் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமலும் இருந்து வந்தது.

அப்பகுதி வாழ் மக்களின் முயற்சியால் கோவில் புதுபொலிவு பெற்று வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்க்கு முன்னராக கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கொடி மரமானது இலுப்ப மரத்தில் செய்யபட்டது இதன் உயரம் சுமார் 25 அடி இக்கொடி மரத்தை கிழபனையூர் எனும் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்டு அறந்தாங்கி முக்கிய வீதிகள் வழியாக கொண்டுவரப்பட்டு வழி எங்கும் பக்தர்களுக்கு தீபாரதனை கட்டபட்டது சிவ பக்தர்கள் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

பின்னர் பக்தர்களால் சிவபுராணம் பாட பெற்றது கொடிமரத்திற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் திபாரதனைகள் செய்யபட்டு நமச்சிவாய எனும் முழக்கங்களுடன் கொடிமரம் நடபெற்றது. வரும் பிப்ரவரி 17ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
 



Leave a Comment