ஸ்ரீ பேடராயசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்... ஹெலிகாப்டரில் பூ தூவி வழிபாடு...


கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அடுத்த  தேன்கனிக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான சௌந்தர்யவல்லி சமேத  ஸ்ரீ பேடராயசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.  

கடந்த 16ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கிய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.  மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 16ம் தேதி ரக்ஷாபந்தனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.17ஆம் தேதி யாகசால பிரவேசம் கலச ஸ்தாபன சாந்தி ஹோமம் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. 18ம் தேதி பிரதிஸ்தாபன ஹோமம், கோபுர கலச அபிஷேகம், தத்துவ ஹோமம் நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நித்யாராதனம், பிரதிஷ்டான ஹோமம், மகா பூர்ணாஹுதி, பிராண பிரதிஷ்டை, மந்திர புஷ்பம், யாகசாலை பூஜைகள் நடந்தன.  

பின்னர், வேத பண்டிதர்கள் புனித நாடி தீர்த்தங்களுடன் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நாடி தீர்த்தங்களை ஊற்றி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தினர்.  பின்னர் மகா மங்களஹாரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுர கலசங்களுக்கு மூன்றுமுறை பூக்களால் தூவப்பட்டது.அப்போது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.



Leave a Comment