பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில்  தீர்த்த கலச ஊர்வலம்....


சேலம் மாநகர் பிரசித்தி பெற்ற  பள்ளப்பட்டி  மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீர்த்த கலச ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளமு. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். 

 சேலம் மாநகர்  பள்ளப்பட்டியில் உள்ள பிரசித்திப்பெற்ற   அருள்மிகு மாரியம்மன் கோயில் தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் புதியதாக அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலையம்மாள்  சன்னதிகள்  அமைக்கப்பட்டு அதற்கான பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.


 புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு  தீந்தமிழ் திருக்குட புனித நன்னீராட்டு விழா,  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும்  ஊர்வலம் நடைப்பெற்றது. பள்ளப்பட்டி மூன்று ரோடு  பகுதியிலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில்  கடுமையான  விரதம் மேற்கொண்டு  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட   பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.


 தாரை, தப்பட்டைமற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முன்பாக 50-பெண்கள்  கோவிலின்  மேல்புறத்தில் அமைக்கப்படும் கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர் .
இதில்  பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்து  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தொடர்ந்து ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட தீர்த்த கலசங்கள் அனைத்தும் யாகசாலையில்  வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர்,   இரண்டாம் மற்றும் மூன்றாம் கால  பூஜைகள் செய்யப்பட்டதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக  கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
 இன்று நடைபெற்ற தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி  ஊர்வலத்திற்கு  ஏற்பாட்டினை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment