பழனியில் தெப்பத்தேர் திருவிழா 


பழனி தைப்பூச திருவிழா நிறைவாக தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய் வானையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 

6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து, 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், உபசாரங்களும் நடைபெற்றது. 

அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியாள் வாகனத்தில் வந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். 



Leave a Comment