திருச்செந்தூர் - வெயிலுகந்த அம்மன் ஆவணித் திருவிழா!


வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலாக இத்திருத்தலம் போற்றப்படுகிறது. ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பின்பு ஒளிவழிபாட்டுக்கு பின்னர் கோவிலை சேர்தலும், இரவு 7மணிக்கு அம்மன் பூத வாகனம், சிம்ம வாகனம். காளை வாகனம், வேதாள வாகனம், அன்னம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாட்டுக்கு பின்பு கோவில் சேர்தல் நிகழ்வு நடைபெறுகிறது.


எட்டாம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள ஆதித்த நாடார்கள் மண்டகப்படியில் அம்மனுக்கு அபிசேகம் அலங்காரமாகி குதிரை வாகனத்தில் பவனி வந்து பந்தல் மண்டபத்தில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் நடைபெறுகிறது. 10ம் திருவிழாவான வருகிற 27-ந்தேதி காலை 6மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது, அன்று மாலை 4மணிக்கு சுப்பிர மணிய சுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டகப் படியில் தீர்த்தவாரி நடை பெறுகிறது. இரவு 8மணிக்கு அம்மன் சண்முக விலாசத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர் சேவை ஒளிவழிபாடு ஆகி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்று அம்மன் அருளைப் பெற எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர்.



Leave a Comment