முருகப்பெருமானின் பெயர் காரணங்கள்!


முருகக் கடவுளான சுப்ரமணியர் தம் தந்தையான சிவபெருானால் கார்த்திகை மாதம், விசாக நட்சத்திரத்தில் பிறந்தார். அதனால் ‘கார்த்திகேயன்’ என்றும் ‘விசாகன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

அக்கினித் தேவனின் வயிற்றில் தங்கி இருந்ததால் ‘பாவகி’ என்றும், கங்கையிலும் தங்கி அந்த கங்கை நீரையும் உண்டு உமிழ்ந்ததால் ‘கந்தன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

அதேபோல் ஆறுமுகம் கொண்டு இருப்பதால் ‘சண்முகம்’ என்றும், அனைவருக்கும் சுவாமியான சிவபெருமானுக்கே ஒரு சமயம் நாதனாக விளங்கியதால் ‘சுவாமிநாதன்’ என்றும் மயில் வாகனம் ஏறுவதால் ‘மயூரேசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஜீவர்களின் உள்ளங்களிலும், மலைக்குகைகளிலும் வசிப்பதாலும், தேவர்களுக்குத் தலைவனாதலால் ‘தேவ சேனாதிபதி’ என்றும் மாசேனன் என்றும் சேவற்கொடி கொண்டு இருப்பதால் ‘சேவற்கொடியோன்’ என்றும் குன்றாத கட்டிளமை வாய்ந்தமையால் ‘திருமுருகன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஞான சக்தியான வேலாயுதம் தரித்திருப்பதால் ‘வேலாயுதன்’ என்றும் ஞானசுந்தரம் என்றும் சிவபெருமானுக்கு அருமை குமரன் என்பதால் ‘குமரன்’ என்றும் ‘சிவகுமாரன்’ என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறார்.



Leave a Comment