குழந்தை பாக்கியம் அருளும் சிறுவாச்சூர் மதுரகாளி..!


திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் வித்தியாசமான இத்திருக்கோயில் ஆதிசங்கரர் வழிபட்ட புண்ணியத் தலமாக போற்றப்படுகிறது. மேலும் இங்கு பிள்ளை வரம் வேண்டும் பக்தர்களுக்கு மலடு நீக்கி மகப்பேறு அளிக்கும் பராசக்தியாகவும், பில்லி சூனியம் போக்கும் அன்னையாகவும் மதுரகாளியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

மதுரகாளி அம்மனின் தலவரலாறனது. கண்ணகி தனது கணவனுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு பொறுக்காமல் மதுரையை எரித்தாள்.அதன் பின் மன அமைதியின்றி திரிந்த கண்ணகி திருவாச்சூர் வந்து அமைதிக்காக இத்தலம் விரும்பி அமர்ந்தாள் என கூறப்படுகிறது.இத் திருக்கோயிலில் வெள்ளி மற்றும் திங்கள் இந்த இரு தினங்களைத் தவிர திருவிழா நாட்கள் முக்கிய விசேஷ நாட்களில் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் அருகிலுள்ள பெரியசாமி மலையில் தங்குவதாக கூறுகிறார்கள்.

மதுரை காளியம்மன் என்ற பெயரே நாளடைவில் மருவி மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்திருத்தலத்தில் தினமும் காலை 8 மணிக்கு அம்மன் சன்னதி திறக்கப்பட்டு 11 மணிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, பிறகு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. உச்சி காலத்தில் மகா தீப ஆராதனை நடக்கிறது இந்த நேரத்தில் அம்மனை வணங்குவோருக்கு அம்மனின் முழு அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு முதல் செவ்வாய்கிழமை பூச்சொரிதல் விழாவும் அதற்கெடுத்த செவ்வாய்கிழமை காப்பு கட்டிப் பெருந்திருவிழாவும் நடத்தப்பபடுகிறது. மேலும் ஆடி18- ஆம் நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.



Leave a Comment