நெல்லையப்பர் காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற உள்ளன.

அதன்படி இன்று (11-07-2018) நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் காந்திமதியம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.Leave a Comment