ருத்ராட்சத்தின் மகிமைகள்!


ஐந்து ருத்ராட்சக் காய்களை செப்புப் பாத்திரத்தில் அரை லிட்டர் சுத்தமான நீரில் போட்டு, அதனுடன் ஐந்து வில்வ இலைகளையும் போட்டு, இரவு முழுதும் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்நீரைக் குடிக்க வேண்டும். அப்படி 48 நாட்கள் குடித்து அதில் உள்ள வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால், இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும், நீரழிவு, மன உளைச்சல், அதிர்ச்சி முதலியவை நீங்கும்.

விஷப் பூச்சிகள் தீண்டும் நேரத்தில் ருத்ராட்சத்தை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்து கடிவாயில் பூசினால் வலி குறையும்.விஷம் இறங்கும். மேலும் ருத்திராட்சத்தை ஊற வைத்த நீர் நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி, இரத்தசோகை போன்றவற்றை போக்கும். ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டால், நினைவு ஆற்றல் பெருகும். ருத்ராட்சத்தினை தனியாக அணியாமல் ஏதேனும் உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் மிகவும் சிறப்பு.

ருத்ராட்ச மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாத காலத்தில் விபூதியில் வைக்க வேண்டும். இறந்தவர் வீட்டுக்குச் சென்று கலந்து கொள்ளும் காலத்தில் ருத்திராட்ச மாலையை கழட்டி வீட்டில் வைத்து விட்டுச் செல்வது நல்லது.Leave a Comment