கண் நோய்களை தீர்க்கும் சேலம் கோட்டை மாரியம்மன்


சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாங்கனி நகரத்தில் கோயில் கொண்டுள்ளாள் கோட்டை மாரியம்மன். சேலத்திலுள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் கோட்டை பெரிய மாரியம்மன் என்று பெயர் வந்துள்ளது. இத்திருத்தலத்தின் வரலாறானது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை அமைத்து ஆண்டு வந்தனர்.  அப்போது அவர்கள் தங்களுக்கு காவல் தெய்வமான மாரியம்மனுக்கும் மற்றும் பெருமாளுக்கும் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த கோட்டையில்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டை மேடு என்ற இடம் மட்டும் இங்குள்ளது.

இங்கு மூலவராக காட்சியளிக்கும் மாரியம்மன் நான்கு கரங்களுடன் அழகு திருமேனியுடன் கம்பீரமாக விளங்குகிறார். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி, இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் காட்சியளிக்கிறாள். மேலும் இத்திருக்கோயில் முன் மண்டபம், வெளிமண்டபம், பலிபீடம், வெள்ளிபிரகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம், கருங்கல்லால் அமைக்கப்பட்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.மேலும் இக்கோவிலில் அம்மை நோய் கண்ட பக்தர்கள் அம்மனை வேண்டி புனித நீர் வாங்கி தம் மீது தெளித்து நோய் நீங்க பெறுவதாக நம்புகிறார்கள்.மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்வதும் வழக்கமாக உள்ளது. மேலும் இக்கோவில் திருவிழாவின்போது பூச்சாடுதல் விழா நடைப்பெறும் அவ்விழாவில் இக்கோவிலிருந்து பூக்களை எடுத்துச் சென்று சேலத்தில் ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கு பூச்சாட்டி அபிஷேகத்தை பக்தர்கள் செய்துவருகிறார்கள்.Leave a Comment