தக்கோலம் ஆலமரத்தின் அடி குருபகவான்


கருவறை கோஷ்டத்தில் தனிக்கோயில் போன்ற அமைப்பிற்குள் குருபகவான் அருள்பாலிக்கிறார். நுணுக்கமான வேலைப்பாடமைந்த அழகிய திருவுரு.

விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித் தால் ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜ இலைகளைப் போன்றே தோற்றமளிக்கிறது. வழக்கமாக, தட்சிணா மூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும். தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார்.

ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலை சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும், இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலையுடன் அமர்ந்திருக்கும் இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்கிறார்கள்.

சீடர்களை ஆட்கொண்டருளும், கண்டிப் போடு வழிப்படுத்தும் தோற்றம் இது என்றும் விவரிக்கிறார்கள். சென்னை - பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும், அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம். Leave a Comment