நினைத்தது நடத்தி வைக்கும் சாய்பகவான் 


பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும்.

எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்' என்றும், ' என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்' என்றும் பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது.

கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதை போன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருகிறேன். இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.



Leave a Comment