முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா


ஸ்ரீகாளஹஸ்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் துணைக்கோயிலான முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சரக உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் மயில் கோலம், சேஷபானு கோலம் ஆகியவை போடப்பட்டது. இதில் ஸ்ரீகாளஹஸ்தியை சுற்றிய பகுதிகளை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் இன்று (4ம் தேதி) காலை கிராம கடவுள் கோலமும், மாலை ரேணுகாதேவி கோலமும் மதியம் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் நிறைவு நாளான நாளை(5ம் தேதி) காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை மற்றும் கோயில் வளாகத்தில முத்துமாரியம்மன் கோலமும், இரவு அம்மன் ஊர்வலமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா செய்து இருந்தார்.



Leave a Comment