கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ஹர்!




இங்குள்ள நரசிம்ஹ மூர்த்தியானவர் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், ஆனந்த பீடம், யோக பீடம் ஆகிய 5 பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்று இருக்கும் நரசிம்மருக்கு மேல் இரண்டு கரங்களில் சக்ரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத முத்திரை காட்டி தன்னை நாடி வந்தவரை வாழ வைக்கும் பெருமாள் என்பதனை உணர்த்துகிறது.

மஹாலக்ஷ்மி தேவியுடன் காட்சி தரும் இந்த நரசிம்ஹ மூர்த்தியானவர் " த்ரி நேத்திரம்" அமைந்துள்ளது. " அருள் விழியால் கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்."

 மடியில் அமர்ந்துள்ள தாயார் தாமரை மலர் தாங்கி அபய ஹஸ்தம் கொண்டு மிகவும் திவ்யமான ஹம்ஸம் கொண்டு காட்சி தருவதை பக்தர்கள் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பதனை உறுதி செய்யும் வண்ணம் காட்சி தருகின்றனர்.

இங்கு அருள்புரியும் இந்த நரசிம்ஹ மூர்த்திக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் ( பற்கள்) 12 அமைந்து இருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளை குறிக்கிறது.

திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆகிய நவக்கிரஹ அம்சத்துடன் இந்த ஸ்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பு.

 நரசிம்ஹர் அமைப்பு பெருமாளின் 6 அவதாரங்கள், தான் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களை நினைவுபடுத்தும் வண்ணம் இருக்கிறது.

 இந்த புகழ் பெற்ற ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 70 km தொலைவில் அமைந்துள்ளது.

ஓம் நமோ நாராயண.



Leave a Comment