தீபத் திருவிழா கொடியேற்றம்


10 நாள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நவம்பர் 23 நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதையடுத்து, காலை 9 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு வரை நடைபெறும். டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.



Leave a Comment