மாசிதெப்பத் திருவிழா... கருட வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் வீதி புறப்பாடு...


ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் மாசிதெப்பத் திருவிழாவில் 5ம் நாள் கருட வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் வீதி புறப்பாடு. திரளான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் விளங்கிறது.  இத்திருத்தலத்தில்தான் சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்தாா். மாசி மாதம் திருவிசாகத்தன்று தாமிரபரணி பொருநல் சங்கனித்துறையிலிருந்து தீா்த்தம் எடுத்துக் காய்ச்சவும் என உத்தரவு நம்மாழ்வாாிடமிருந்து  பெற்று, மதுரகவி ஆழ்வாரால்  கை படாதா உற்ச்சவா் திருமேனி  நமக்கு வணங்க கிடைத்தது. இந்த நன்னாளைப் போற்றும் முறையிலே ஆண்டுதோறும் மாசி தெப்ப திருவிழா 13 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம் கடந்த 20ம் தேதி தொடங்கி  தொடா்ந்து நடைபெறுகின்றது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நம்மாழ்வாா்  காலை வீதி புறப்பாடு,திருமஞ்சனம் நடைபெறுகின்றது.  மாலையில் சுவாமி  நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

இன்று ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்றபிரானும், அன்னவாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். அத்யாபக கோஷ்டியின்   நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை விண்ணப்பத்து முன் செல்ல சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சுவாமி நம்மாழ்வாா் ஏழுந்தருள  குடைவரை பெருவாயிலில்  தீபாராதனை நடைபெற்றது. கருட சேவை மாட வீதிகளில் வலம் வந்தது. பக்தா்களின் நாம சங்கீா்த்தனம் பாடியபடி பின் சென்றனா். வருகின்ற 28ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 29ம் தேதி இரவில் சுவாமி  நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும், சுவாமி பொலிந்துநின்றபிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

30ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் மற்றும் ஆச்சாா்யா்கள் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர்  உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.



Leave a Comment