திருவாரூர் அருள்மிகு அபிஷேகவல்லி தாயார் சமேத பக்தவசலபெருமாள் திருக்கல்யாண வைபோகம்...


வைணவ ஆலயங்களில் மிக முக்கியமானதும்,108வைணவ தலங்களில் 17வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் அடுத்த திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி தாயார் சமேத பக்தவசலபெருமாள் ஆலயத்தில்  மண்டலாபிஷேக நிறைவை ஒட்டி  இன்று திருக்கல்யாணம் நடைப்பெற்றது.

இதையொட்டி பெருமாளும் தாயாரும்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  தாயார் சன்னதி எதிரே எழுந்தருளி மாலைமாற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து பெருமாளும்,தாயாரும் ஊஞ்சலில் எழுந்தருளி நலுங்கு  நடைப்பெற்று மணக்கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து பூர்வாங்கபூஜை,கும்பபூஜை நடைப்பெற்றது.பின்னர் தாயாருக்கும்,பெருமாளுக்கும் காப்பு கட்டப்பட்டது,பின்னர் பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு,புதுவஸ்திரம் சாத்தப்பட்டது. பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு மாங்கள்யபூஜை  செய்யப்பட்ட பின்னர் மங்கள இசை முழங்க மாங்கல்யத்தை பெருமாளின் கையில் வைத்து மாங்கல்யத்தை பட்டாச்சாரியார்கள் தாயாரின் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினர்.

தொடர்ந்து பெருமாளுக்கும்,தாயாருக்கும் தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.



Leave a Comment