அருள்மிகு கெங்கையம்மன் எல்லையம்மன் கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா...


ஆம்பூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் எல்லையம்மன் கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா. 30 அடி உயரம் கொண்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயில் மார்கழி மாத திருத்தேர் திருவிழா வருடா வருடம் மார்கழி முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆலங்கார ஆராதனை பூஜைகளும், கூழ் ஊற்றுதல் மற்றும் பொங்கல் வைத்து பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து தாரை தப்பட்டை நாதஸ்வரம் முழங்க, வாணவேடிக்கை, கரகாட்டம், மயிலாட்டத்துடன்  அருள்மிகு கெங்கையம்மன் திருத்தேர் வீதி உலா கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு பஜார், எஸ்.கே ரோடு, கிருஷ்ணாபுரம் , பெருமாள்கோவில்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலமாக சென்றது அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேர் மீது தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி உப்பு, மிளகு ,பொறி ஆகியவற்றை போட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment