ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா


விளம்பார் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் நாதஸ்வரம் வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா - ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று மங்கல இசை முழங்க கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால பூஜை நடைபெற்றது.தொடர்ந்து இன்று இரண்டாம் கால பூஜைகள் செய்யப்பட்டு நவகிரக ஹோமமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து மஹா யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் பூக்களை தூவி புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.தொடர்ந்து கோபுரத்தில் இருந்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  சாமி சரணம்  ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா திருவீதியுலாவும் நடைபெற்றது.இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் விளம்பாவூர்,தென்கீரனூர்,ஏமப்பேர்,கள்ளக்குறிச்சி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment