தீபாவளி.... கங்கா ஸ்நானம் மேற்கொள்ள உகந்த நேரம்....


தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சிவபெருமானின் முழு அருளையும் நாம் பெறுவதற்கு கங்கா ஸ்தானம் செய்வது மிகவும் நல்லது.

வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், சிறிதளவு காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைக்கவும். வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். உடம்பில் தேய்த்து ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

கங்கா ஸ்நானம் மேற்கொண்ட பிறகு புத்தாடைகள் அணிந்து, பின்பு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சுவாமிகளுக்கு மலர்கள் வைத்து பின்பு நாம் தீபாவளி பண்டிகைக்காக செய்து வைத்த பலகாரங்கள் அனைத்தையும் சுவாமிக்கு படையலாக படைக்க வேண்டும் நாம் செய்து வைத்த மருந்து லேகியத்தையும் படைக்க வேண்டும்.

 



Leave a Comment