தீபாவளி... லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்...


தீபாவளி திருநாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும் அதை அவருக்கு அருளிய மகாலட்சுமியையும் பூஜை செய்து வழிபட்டால் இல்லங்களிலும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.  செல்வத்தை பிறருக்கு அருளும் வரத்தையும் தந்தவர் மகாலட்சுமி தாயார் தான். எனவே இந்த பூஜையை குபேர பூஜை என்று சொல்வதை விட மகாலட்சுமி குபேர பூஜை என்று கூறுவதே சிறந்தது.

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் :

தீபாவளி நாளில் செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அம்மாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார். ‘

பூஜை செய்யும் முறை :

மகாலட்சுமி தாயார் படம் மற்றும் குபேரர் படம் அல்லது குபேரர் விக்ரகம் இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும். நீங்கள் படத்திற்கு நேரில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது. படம், எந்திரம் வைத்து இருக்கும் இடத்திற்கு இடம் அல்லது வலது புறமாக நீங்கள் அமர வேண்டும்.

குபேரர் எந்திரம் இருந்தால் அதை வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை என்றால் குபேர எந்திரத்தை ஒரு மனை பலகையில் வரைந்து கொள்ளுங்கள். குபேரர் எந்திரத்தில் உள்ள எண்களின் ஓரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நாணயத்தை வைக்க வேண்டும் அந்த நாணயம் எண்களை மறைக்காதவாறு வைத்துக் கொள்ளுங்கள். கட்டத்தின் ஓரத்தில் ஸ்ரீ என்று எழுதி வைக்கவும்.

குபேர எந்திரத்தின் முன்பு அமர்ந்து தாமரை பூவின் 9 இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இதழிலும் ஒரு நாணயத்தை வைத்து அதில் கொஞ்சம் குங்குமம் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.ஒவ்வொரு முறை இந்த நாணயத்தை வைக்கும் போதும் இந்த மந்திரத்தை மட்டும் ஜெபித்தாலே போதும்.

 ‘ஓம் குபேராய நமக!!’

 ‘ஓம் தந்தாய நமக!!’

இந்த நாமத்தை மட்டும் நீங்கள் அந்த ஒன்பது நாணயத்தை வைக்கும் போதும் ஒன்பது முறை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பின்பு அதில் உள்ள இந்த காசுகளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பணத்தை அடுத்தடுத்த முறை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியாக எடுத்து வைத்து விடுங்கள் மற்ற பணத்துடன் கலந்து செலவழித்து விட வேண்டாம்.

 



Leave a Comment