குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வெள்ளி திருத்தேர் பவணி


காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வெள்ளி திருத்தேர் பவணி உற்சவம். பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் வள்ளி, தெய்வயாணையோடு எழுந்தருளி காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அறங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முருகன் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வள்ளி தேவானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை‌  ஏராளமானோர் வெள்ளித் தேரினை  வடம் பிடித்து இழுத்து கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்தனர்

மேலும்  அப்போது அங்கு திரண்டிருந்த  நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை பயபக்தியுடன்  சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.



Leave a Comment