ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?


 

சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..?
சனி பலமானால் கெடுதலா நல்லதா..?

இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு யோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்..அதனால்தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.
ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக்கொடுத்து விடுகிறார்..சனி வறுமை தரும் கிரகம் என்பதாலும்,இருள் கிரகம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கி விடுகிறார்..சந்திரன் ஒளி கிரகம் .சந்திரனால் உண்டாவதுதான் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவதால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிறது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும்.சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது...
தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் மீது சலிப்பு உண்டாவதும்,நினைத்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும்.வாயுபகவான் சனி என்பதால் வாத நோய்களையும் சிலருக்கு உண்டாக்கிவிடுவார்..வாகனங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக்கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.
ஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தாலும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை .அவர் ரிசப ,மிதுன,துலாம்,கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இருப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய்,பாரிசவாயு,எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய்கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.
ஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என்கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக்கும் மேஷம் ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சிகம் ராசிக்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.
குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை,தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாவதும்,பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிகபிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க் செய்யாமல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.
சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்...சனிக்கிழமை காகத்து சதம் வைப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.



Leave a Comment