ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் கொடிமரம் பந்தகால் நடும் நிகழ்ச்சி...


வாலாஜாப்பேட்டை மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் கொடிமரம் பந்தகால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 44-ஆம் ஆண்டு ஆடி வெள்ளி விழாவினை முன்னிட்டு பெண்கள் அனைவரும் 1,001 பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெற உள்ளது..

மேலும் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பஸ், லாரி, உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பயணிகள் ஆட்டோ, லோடு ஆட்டோ உரிமையாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து திருவிழாவை  நடத்துவார்கள். அதன்படி இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை நாள் என்பதால் கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகர் பெருமானுக்கு பல்வேறு பூ மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து  கொடிமர பந்தக்காலுக்கு  சிறப்பு பூஜைகளை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உற்சவர் விநாயக பெருமான் தங்க ஆபரணங்களை அணிவித்து மாட்டு வண்டியில் அமர  வைத்தவாறு பந்தகாலை பக்தர் ஒருவர் தோளில் சுமந்தவாறு முக்கிய சாலையின் வழியாக பட்டாசு வெடித்து கோவில் வரை  ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்னர் கோவில் உள்ளே கொடியேற்றப்படும் பந்தாலுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பாலபிஷேகம் செய்து கோவில் வளாகத்தின்  வெளியே பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு கற்பூரம் ஏற்றியும் விளக்கேற்றியும் வழிப்பட்டு சென்றனர்.



Leave a Comment