செங்கற்களை பொன்கற்களாக மாற்றிய அக்னீஸ்வரர்!


நன்னிலத்திற்குக் கிழக்கே 10 கி.மீ தொலைவிலும் திருநள்ளாறுக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் திருப்புகலூர் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அம்மையார் கருந்தாழ்குழலியுடன் சமேதராக காட்சியளிக்கிறார்.

இத்தல புராணமானது திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரரிடம் ஒருமுறை அவரது மனைவி பரவையார். பொன் வேண்டும் என்று கேட்டபோது. சுந்தர்ருக்கு திருப்புகலூர் திருத்தலம் நினைவுக்கு வந்தது. இதையடுத்து திருப்புகலூர் சென்ற சுந்தரர். அங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் சிவபெருமானைத் தரிசனம் செய்தார். அன்றிரவு கோவில் மண்டபத்தில் தங்கினார். அப்போது தலைக்கு தலையணையாக அங்கு கிடந்த சில செங்கற்களைப் பயன்படுத்தினார்.

காலையில் துயில் கலைந்து எழுந்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. அவர் தலையணையாக பயன்படுத்திய செங்கற்கள் பொன் கற்களாக மாறிப்போய் இருந்தன. பக்திப் பரவசத்தில் தன்னை அறியாமலேயே அந்த திருத்தலத்து இறைவனைப் பாடினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு திருப்புகலூர் கோவிலுக்கு புதிதாக வீடு கட்டுவோர் கட்டிய வீட்டில் குறை உள்ளவர்கள் புதிய அலுவலகம் கட்டுவோர் புதிய தொழிற்கூடம் கட்டுவோர் என பலரும் வருகிறார்கள். அவர்கள் சில செங்கற்களை அந்த கோவிலில் வைத்துப் பூஜை செய்து அதை தங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படிச் செய்தால், புதிய கட்டடம் எழுப்பும் பணி சுமூகமாக விரைவில் நடந்து முடியும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.



Leave a Comment