தலையெழுத்தை மாற்றியமைக்கும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி கிழக்கு பார்த்து அமைந்திருக்கும் திருக்கோவிலாகும்.

இக்கோயில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் மூலவராகவும் வலது புறத்தில் பிரம்மா,இடது புறத்தில்  ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி அம்மனாகவும் காட்சியளிக்கின்றனர். பிரம்மா பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும், தென் மூலையில் விநாயகரும், வட மூலையில் கஜலட்சுமியும் உள்ளது.மேலும் இக்கோயில் 12 சிவலிங்கமும் உள்ளது.

காலபைரவர்
தெற்கு நோக்கி உள்ள காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

தூர்க்கையம்மன்

வடக்கு நோக்கி உள்ள தூர்க்கையம்மன் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.  8 ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.

 தலவிருட்சமாக மகிழம்மரம் இருக்கிறது.

வரலாறு

புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். 

அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கீழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். 

மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

 தீர்த்தம்
 பிரம்ம தீர்த்தம்  அம்மனின் ஆலயத்தின் வடப்புறம் உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளயும்,வற்றாத நன்னிரையும் கொண்டது, இத்தீர்த்ததினால் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.  ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கூடிய குளம் ஆகும்.

பதஞ்சலி முனிவர்

ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு.அவரே ஆதி சேஸன் அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

 அதையடுத்து,  அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த 

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்... அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!

ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!

 கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும் திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே... பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்... இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!

விவசாயம்

அதேபோல், சுற்றுவட்டாரத் தில் இருந்தெல்லாம் விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தங்களின் வயல்களில், விதைப்பார்களாம்! அப்படி வழிபட்டு விதைத்தால், அந்த முறை போட்டதெல்லாம் முளைக்கும்; தானியங்கள் பெருகி லாபம் கொழிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

 சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் செட்டி குளம், துறையூர், முசிறி, சிறுகனூர், பாடலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் விவசாயிகள் விதை நெல் அல்லது தானியப் பயறு வகைகளை அம்பாளின் திருவடியில் வைத்து பூஜித்து, ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். கிட்டத் தட்ட, திருப்பட்டூர் கோயில்களின் விழாக்களில் ஒன்றாகவே இந்த வைபவம் நடைபெறுமாம்!

 விளை நிலங்கள் செழித்து வளர்ந்தால்தான் உலகில் தானியங்கள் பெருகும். குழந்தைகள், அறிவுடனும் செறிவுடனும் வளர்ந்தால்தான் அகிலத்தில் ஒவ்வொரு குடும்ப மும் உன்னதமான நிலைக்கு உயரும். இந்த இரண்டையும் தந்தருளக்கூடிய, காத்தருளக் கூடிய தலம்தான் திருப்பட்டூர்!

 எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து,  அதிர்வலைகளைப் பரப்பிய இடம்... என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்... இன்றைக்கு மெள்ள மெள்ள வளர்ந்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்கள், சென்னை, வேலூர் ஆகிய ஊர்களிலிருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங் களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்தபடியே உள்ளது.
 



Leave a Comment