குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்....


உலகப்புகழ்பெற்ற  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்குகிறது .

  தசரா திருவிழாவிற்கு  புகழ்பெற்ற மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சரியாக கொண்டாடப்பட்டுவருகிது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு இங்கு தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடரந்து பத்து நாட்கள் வெகு விமர்சரியாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை கொடியேற்றத்தினை தொடர்ந்து  விரதமிருந்து வரும் பக்தர்கள்  காப்பு அணிந்து  தாங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தாங்கள் விரும்பும் வேடங்களான அம்மன் வேடம்,  காளி வேடம்,  ஆஞ்சநேயர் , குரங்கு,  கரடி மற்றும் சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று காணிக்கை எடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் திருநாளன்று நடைபெறும்.

மகிசாசூரசம்காரம் அன்று கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.  தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி குலசேகரன்பட்டிணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
 



Leave a Comment