திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம்


திருமலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் அறங்காவலர் குழு தலைவர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ளது. இந்நிலையில் புதிய அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதாகர் யாதவ், ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புட்டா சுதாகர் யாதவ் நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆசி பெற்றார்.Leave a Comment