காஷ்மீரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தெற்காசிய சமாதான மன்றம் ....


மனித நேய மற்றும் ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் ஜம்மு காஷ்மீரிலிருந்து பலதரப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையின் கூடிய தெற்காசிய சமாதான மன்றம் நடத்தப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, முன்னாள் போராளிகள், போர்குணங்களால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள், இளம்தலைவர்கள், மகளிர், தொழிலதிபர்கள், பெற்றோர், காஷ்மீர அரசு சார்பற்ற நிறுவனங்கள், சுஃபி தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள் கலை கலாச்சார தொடர்புள்ளவர்கள், சீக்கிய சமூக பிரதிநிதிகள் மற்றும் கல்லெறிதல் போன்றவற்றில் ஈடுபடும் அதிருப்தியாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

அண்மைய மாதங்களில் இதுவே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரிலிருந்து பலதரப்பட்ட பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து அமைதியான வளமான காஷ்மீரை மீட்டெடுக்கும் பேச்சு வார்த்தைக்கு கூடிய நிகழ்வு.

இந்த, நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அண்மைய மாதங்களின் காஷ்மீரில் நிகழ்வுகள் உங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி யிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், "இதற்கு உடனடித் தீர்வுடன் தான் வரவில்லை என்றும, அனைவரும் ஒன்று கூடி கலந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தெருக்களில் கல்லெறிதல், துப்பாக்கிச் சூடு இவற்றின் மூலம் தீர்வுகள் கிடைக்காது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
இதையொட்டி அடுத்த அடியாக தெற்காசிய அமைதி மன்றம் அமைக்கப் பட்டது. இந்த மன்றம் எட்டு தெற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து தொழில், திறன் வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றம், கல்வி கூட்டுப் பங்காண்மை, மகளிர் மேம்பாடு முயற்சிகள் போன்றவற்றில் ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



Leave a Comment