சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா...


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரமோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டது.
மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரமோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் முதல் உற்சவமாக இரவு பெரியசேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அன்ன வாகனத்தில் கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



Leave a Comment