மீனம்: பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!


மீனம்

 

கிரகநிலை:

 

சுக ஸ்தானத்தில் குரு() - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

 

கிரகமாற்றம்:

 

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

13.02.2026 அன்று சூரியன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

 

இந்த காலகட்டத்தில் நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம்.

உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.

மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

 பெண்களுக்கு முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

 அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

 

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறுவியாழன்

 

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 08, 09

 

அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 15, 16, 17

 

 



Leave a Comment