சிம்மம் : பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!


சிம்மம்

 

கிரகநிலை:

 

ராசியில் கேது - ரண ருன ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   - களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு() என கிரக நிலைகள் உள்ளன.

 

கிரகமாற்றம்:

 

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

13.02.2026 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

 

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

 

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். வீண்கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

வெளி வட்டார தொடர்புகளினால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் இருந்த தடங்கல்கள் நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.

 பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

அரசியல்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

 

 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 26, 27



Leave a Comment