மிதுனம் : பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!


மிதுனம்:

 

கிரகநிலை:

 

ராசியில் குரு() - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

 

கிரகமாற்றம்:

 

 

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

 

13.02.2026 அன்று சூரியன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

 

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

பேச்சை கடுமை அதிகரிக்கலாம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

 தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

 

ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும்.

 சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ராசிக்கு இரண்டில் செவ்வாய் சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்வதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும்.

அரசியல்துறையினருக்கு எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

 

 

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்பிப்ர 15, 16, 17



Leave a Comment