ரிஷபம்: : பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!


ரிஷபம்:

 

கிரகநிலை:
 

தனவாக்கு ஸ்தானத்தில் குரு() - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

 

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

13.02.2026 அன்று சூரியன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

 

இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று ராசிக்கு பத்தில் சஞ்சாரம் செய்வதால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். முயற்சிகள் கைகூடும்.

பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

 

 அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை ஏற்படும். மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும்.

பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

 

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்வெள்ளி

 

சந்திராஷ்டம தினங்கள்:       பிப்ர 13, 14

 

அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 20, 21

 



Leave a Comment