​​​​​​​​​​​​மேஷம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!


மேஷம்:

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன்தைரிய வீரிய  ஸ்தானத்தில்  குரு ()  -  பஞ்சம ஸ்தானத்தில் கேதுபாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய்லாப  ஸ்தானத்தில் சனி, ராஹூஎன கிரக நிலைகள் உள்ளன.

கிரக மாற்றங்கள்:

11-01-2026  அன்று புதன்  பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-01-2026  அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-01-2026  அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப்பற்றியும்  அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவசொல் வாங்க நேரிடும்..

தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பெண்கள் எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவைமுன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

 



Leave a Comment