விருச்சிகம்:டிசம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!
விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில் சூர்யன், செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
06-12-2025 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
15-12-2025 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-12-2025 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
25-12-2025 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
தேனீக்கள் போல் எப்போது சுறுசுறுவென்று இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் பத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
விசாகம்:
இந்த மாதம் தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும்.
அனுஷம்:
இந்த மாதம் உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
கேட்டை:
இந்த மாதம் பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28





Leave a Comment